Skip to main content

டெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பருவநிலை மாற்றத்தாலும் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்சல்களால் பொதுமக்கள் காய்ச்சல் நோயால் அவதியடைந்து அரசு மருத்துவமனையை நாடியுள்ளனர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு உள்ளிட்ட மர்ம காய்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

 

 Dengue, mystery fever crowds in govt hospitals


இந்தநிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலாக இருக்குமோ? என்ற பயத்தில் தினந்தோறும் 2000-த்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைபெற்று செல்கிறார்கள். மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு பேராசிடமல், அவில், அமாக்ஸிலின் உள்ளிட்ட மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மாத்திரைகள் வேண்டாம் சிரப்பாக வேண்டும் என கேட்டு குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதனாலும் மற்ற நோயாளிகளை  கவனிப்பதில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு பாதித்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வரப்படுகிறது.

 

 Dengue, mystery fever crowds in govt hospitals


இதுகுறித்து சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், சாதரண நேரங்களில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 1000 முதல் 1500 நோயாளிகள் தினந்தோறும் சிகிச்சை பெற்று செல்வார்கள். தற்போது பருவநிலை மாற்றத்தால் வரும் காய்ச்சல்களுக்கு ஒரு நாளைக்கு 2500 பேர் வரை வந்து செல்கிறார்கள். அதேபோல் தற்போது அரசுடன் அண்ணாமலைப்பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனை இணைக்கப்பட்டுள்ளதால் அங்கும் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் இங்கு கூட்டம் சற்று குறைந்துள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் புறநோயாளிகள் பிரிவு மதியம் 12 மணி புறநோயாளிகள் பார்வை நேரம் முடிந்தும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

தற்போது அரசு இருமல் மற்றும் நோய் எதிர்ப்புகான மருந்துகளை பாட்டல்களில் கொடுப்பதை நிறுத்தி மாத்திரையாக வழங்கபட்டு வருகிறது. சிலர் சிரப்பு தான் வேண்டும் என்று மருத்துவர் உள்ளிட்ட மருந்தாளுநர்ளிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்வதால் மனஉலைச்சல் ஏற்படுகிறது. இதனால் மற்ற நோயாளிகளை கவனிக்கமுடியாத நிலையும் கால தாமதமும் ஏற்படுவதாக கூறுகிறார்கள். எனவே அரசு இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.