Skip to main content

போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் டெங்கு கொசுக்கள்..கண்டுகொள்ளாத அரசு!!

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவிவருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படியிருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள், பெரியவர்கள் என இதுவரை 6 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.
 

dengue mosquitoes found in  old tyres


அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் கொசு உற்பத்தியாமல் இருக்கவேண்டும், தங்களது இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் கொசு உற்பத்தியாவதை கண்டுபிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம்.

பள்ளிக்கொண்டா அருகே தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் டெங்கு கொசு உற்பத்தியாகி ஒரு குழந்தைக்கு டெங்கு வந்து மரணத்தை தழுவியது எனக்கூறி 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அக்டோபர் 24ந்தேதி வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பலயிடங்களில் ஆய்வு மேற்க்கொண்டனர். இதில் ரங்காபுரம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல அலுவலகத்தின் ஒருபகுதியில் 200க்கும் அதிகமான பேருந்து டயர்கள் வைக்கப்பட்டுயிருந்துள்ளன. அதனை ஆய்வு செய்தபோது, அதில் மழை தண்ணீர் தேங்கியிருப்பதும் அதில் கொசுக்கள் உற்பத்தியாகியிருப்பதும் அறிந்துக்கொண்டனர். அதேபோல் சத்துவாச்சாரியில் ஒரு தனியார் விடுதியிலும் கொசு உற்பத்தியாவதை கண்டறிந்துள்ளனர். அந்த தனியார் லாட்ஜ்க்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் அதனை விட அதிகமாக கொசு உற்பத்தி செய்த அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல அலுவலகத்துக்கு நோட்டீஸ் கூட அனுப்பவில்லையாம் அதிகாரிகள். இதுப்பற்றி அவர்கள் தரப்பில் கூறும்போது, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பியுள்ளோம், அவர் உத்தரவிட்டால் உடனே நோட்டீஸ் அனுப்பி, அபராதம் விதிப்போம் எனக்கூறியுள்ளார்கள்.


அரசு அலுவலகத்தில் கொசு உற்பத்தியாவதை கண்டறிந்தும், அதற்கு நோட்டீஸ் வழங்கவே தயங்குவது ஏன் ?. அரசு அலுவலகம் என்றால் அபாயகரமான டெங்கு கொசுவை உற்பத்தி செய்யலாம்மா ?. இப்படியிருந்தால் எப்படி டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் ?. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை அரசுத்துறையே கேட்கவில்லையென்றால் என்ன அர்த்தம் ?, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள், பொதுமக்கள் மீது மட்டும் ஏன் உடனே அபராதம் விதிக்க வேண்டும் ?. தனியார் அமைப்புகள், நிறுவனங்கள், பொதுமக்கள் என்றால் ஒரு பார்வை, அரசு அலுவலகங்கள் என்றால் ஏன் இன்னொரு பார்வை என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Dr Arunachalam - Health care - dengue fever

 

மழைக்காலங்களில் பெருகி வரும் டெங்கு காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது. அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற கேள்வியை பிரபல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு...

 

பருவகால மாற்றத்தால் பருவ மழை சீக்கிரமாகவே வந்து விட்டது. இதை எதிர் பார்க்காமலேயே நாம் முன்னரே மழை நீர் வடிகாலுக்கான குழிகளைத் தோண்டிப் போட்டிருந்தோம். அது பெரிய சாலைகளிலும், தெருப்புற உட்சாலைகளிலும் மூடப்படாமலே இருந்து கொண்டு தான் இருக்கிறது. 

 

இப்படி மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கிற நீரில் கொசு முட்டைகள் அதிக அளவில் உற்பத்தியாகி அவை டெங்கு காய்ச்சல் நோக்கி இழுத்துச் செல்கிறது. அது போக நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்த பிறகு மாநகராட்சி தரப்பிலிருந்து விழிப்புணர்வை ஆரம்பித்தார்கள். ஆனால் அது பெரிய அளவில் போய்ச்சேரவில்லையோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

 

இரவில் மட்டுமே கடித்துக் கொண்டிருந்த கொசு, அதிகமாக பெருகி இப்போதெல்லாம் பகலிலேயே கடிக்கிறது. அதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் சுற்றி இருக்கிற பழைய பொருட்களில் நீர் எதுவும் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்கிய பொருட்களில் பிளீச்சிங்க் பவுடரை தெளித்து கொசு பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் கொசு வலைகளை வைத்து கொசு நுழைவை தடுக்க வேண்டும். இதுவே டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளாகும்.

 

 


 

Next Story

சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு; இந்திய அணியை பாதிக்குமா?

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Dengue for Subman Kill! Will it affect the Indian team?

 

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 நடந்து வருகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை விளையாட ஓரிரு நாட்களே உள்ளது. இந்தநிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாசிடிவானது, அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துமா?

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா இந்த ஆண்டு நடத்தவுள்ளது. இன்று தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

 

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி வருகிற ஞாயிறு, சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க, சமீபத்தில் தான் இருதரப்பு வீரர்களும் சென்னை வந்திறங்கி பயிற்சி செய்து வருகின்றனர். இந்தியா தனது முதல் ஆட்டத்தை விளையாட இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்தநிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாசிடிவானது, அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. கில்லின் உடல்நிலை சரியாக 7 நாட்கள் வரை ஆகும் என்பதால், அவர் முதல் இரண்டு ஆட்டங்களையும் தவறவிட நேரிடும் எனவும் தெரிகிறது. சமீபத்தில் தான், ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியை இந்தியா துவம்சம் செய்தது.

 

அந்த ஆட்டங்களில் கில்லுக்கு பெரும் பங்கு இருந்தது. மேலும், அவரின் ஆட்டம் இந்திய அணிக்கு ஓப்பனிங்கில் பெரும் பலமாகவும் இருக்கும். அதிலும், தற்போது ரோகித் வேறு செம ஃபார்மில் இருக்கிறார். இந்த நிலையில், கில் இல்லாதது இருவரின் கூட்டணியையும் சிதைத்து புதிய வீரர் விளையாட நேரிடும். இதற்கு மத்தியில் பிசிசிஐ, இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் சுப்மன் கில்லை விளையாட வைக்கவேண்டும் என முனைப்புடன் இருக்கிறது. இதேபோன்ற பிரச்சனை தான் 2019ல் இந்திய அணி எதிர்கொண்டது. அப்போது, ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இவரைத் தொடர்ந்து விஜய் ஷங்கருக்கும் காலில் காயம் ஏற்பட இந்திய அணி சற்றுத் தடுமாறியது. 

 

சுப்மன் கில் ஓப்பனிங்கில் இறங்கவில்லை என்றால், யார் விளையாடுவார்கள்? இவரின் இடத்தை இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷான் நிரப்புவார் எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு தொடக்கத்தில் வலது-இடது பேட்ஸ்மேன்களின் கூட்டணி கிடைப்பது பலம் தான் என்றாலும், கில் இல்லாமல் இந்திய அணியால் ரன்களை குவித்துவிட முடியுமா? விராத் கோலி பழைய ஃபார்மிற்கு திரும்பி நம்பிக்கை அளிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.