
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சென்னை மதுரவாயலில் நான்கு வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதுச்சேரியிலும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி குருமாம்பேட் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத்தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us