பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை டெங்குவுக்கு பலி.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த டி.டி மோட்டூரை சேர்ந்தவர் இமயவரம்பன். இவரது மனைவி ஜான்சிராணி. இந்த தம்பதிகளுக்கு கடந்த மாதம் தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தோஷமாக இருந்துள்ளனர்.

dengue incident

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சலாகவே குழந்தை இருந்ததால் பயந்துப்போய் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்தபோது, குழந்தைக்கு டெங்கு எனச்சொல்லி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தை டெங்கு காய்ச்சலால் நவம்பர் 1ந் தேதி விடியற்காலை இறந்துள்ளது. இதுப்பற்றி மருத்துவர்கள் கூறியதும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையின் அரசின் அஜாக்கரதையை கண்டித்து குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீஸார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

Dengue
இதையும் படியுங்கள்
Subscribe