அம்பத்தூரில் உள்ள அன்பழகன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மனைவி கவிதா, கேத்வீன், கேத்ரீன் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி கேத்ரீன், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறுமியின் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.