வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 27 வயதான தமிழ்ச்செல்வி, புதுபட்டு சேர்ந்த 25 வயதான ரம்பா, சென்னை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதான சிவமணி, வாலாஜா வை சேர்ந்த 35 வயதான சரவணன், 37 வயதான அம்முண்டியை சேர்ந்த பிரதாப், 5 வயதேயான கலவை சுமன், 6 வயதான வாலாஜா ராகேஷ் என மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஏழு பேர் அனுமதிமகிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

dengue fever

அதேபோல், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்த ஒருவர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நோயாளி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் டெங்கு பாதிப்பை மறைக்கப் பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.

இதில் கவுரவம் பார்க்காமல் சுகாதாரத்துறை தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே டெங்குவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.