சென்னை மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகள் டெங்கு, கொரோனாபோன்ற வைரஸ்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளனவா என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court 2222222222_10.jpg)
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி 2018- ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், டெங்குவைத் தடுக்க எடுத்த நடவடிக்கை, டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசுவைக் கண்டறிந்து ஒழிப்பது, சுகாதாரத்தைப்பின்பற்றாத வீடுகளுக்கு அபராதம், டெங்கு உயிரிழப்பு போன்றவை குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem555.jpg)
இந்த வழக்கு இன்று (11/02/2020) தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த கூடுதல் மனுவில் கொரோனாவைரஸ் தாக்குதலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அப்போது,சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆயிரத்து 75 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தினமும் 70 முதல் 80 வீடுகள் என்ற கணக்கில் ஆய்வுகளை மேற்கொள்வதாகவும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்திலிருந்து முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் திட்டமிடல் சரியாக உள்ளதா? அந்தத் திட்டமிடல் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர். மேலும் டெங்கு, கொரோனாபோன்ற நோய் பரப்பும் வைரஸ்களைத் தடுப்பதற்கு, தற்போது எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக உள்ளதா? என்பது குறித்து இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Follow Us