Advertisment

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்..! அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Measures taken to control dengue ..! The High Court ordered the corporation to file the report

டெங்கு பரவலைக்கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடுஅரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (12.07.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த மார்ச், மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள்,தற்போது கரோனா இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் பலன் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படிஉத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

highcourt Dengue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe