
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. பெட்ரோல், டீசலின் தொடர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவந்தனர். மேலும், விலையைக் குறைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், கடந்த 04.11.2021 தீபாவளி அன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் குறைக்கப்பட்டது. இது தீபாவளி பரிசு என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு பற்றி பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த நிலையில் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமா அல்லது வழக்கம் போல் நாடகங்களில் ஈடுபடுவார்களா?” என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீதான வரியைக் குறைக்க வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.