Demonstration in Pollachi on the 10th Kanimozhi MP. Participation ..!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா கலந்து கொண்ட கூட்டத்தில், வரும் 10ஆம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

"பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணையைவிரைவுபடுத்த வேண்டும். எந்த அரசியல் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில், சம்பந்தப்பட்டு வெளியில்இருக்கும் மற்ற குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 10ஆம் தேதி,பொள்ளாச்சியில் வெகுமக்களை ஒன்றுதிரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது" என்று முடிவுசெய்யப்பட்டது.

Advertisment

அதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட பலரும்கலந்துகொள்வது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.