Skip to main content

வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளர் நலன் காத்திட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

 

தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலைகள் மூடல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் பாதிப்புக்கு நிவாரணம் வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

பாரம்பரிய பஞ்சாலை, நூற்பாலை தொழில் நெருக்கடி சமீபகாலமாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மூடல் காரணமாக ஊழியர் வேலை இழப்பு, பொறியியல், உப்பளம் என பல்வேறு காரணங்களால் வேலை இழப்பு அதிகரித்து வருகிறது.தமிழ்நாடு முழுவதும் உற்பத்தியை பெருக்கி தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய அரசு வீண் வதந்திகளையும், தவறான தகவல்களையும் நம்பி ஆலைகளை மூடுவதால் மீள முடியா சமூக பொருளாதார நெருக்கடி தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டது தொழிலதிபர்களல்ல; அப்பாவி தொழிலாளர்கள் தான்.

நாடு முழுவதும் பல பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தூத்துக்குடியிலும் மதுரா கோட்ஸ் கூட்டுறவு நூற்பாலை, எஸ்டெர்லைட் தாமிர உருக்காலை ஆகிய ஆலைகளும், உப்பு உற்பத்தி குறைந்ததால் அதை சார்ந்து இருந்த தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்து பெருநகரங்களை நோக்கி வேலை தேடிச் செல்வதால் சமூகப் பொருளாதார நெருக்கடி முற்றுகிறது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நம்பி கிட்டத்தட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளனர். துறைமுகத்தில் சரக்குகளை கையாளக்கூடிய பலஆயிரம் கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறு, குறு வணிகங்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடலால் ஏற்பட்டுள்ள தாமிர பற்றாக்குறையை நீக்கவும், தாமிர தன்னிறைவு மற்றும் தாமிர ஏற்றுமதியை ஏற்படுத்தவும் தாமிர ஆலை முழு பாதுகாப்பாக இயக்க உறுதி செய்ய முத்தரப்பு குழு மற்றும் நிபுணர் அமைத்து தொழிலாளர் நலன் காக்கவும்,  நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஸ்டெர் லைட் தாமிர ஆலையை மாநில, மத்திய அரசுகள் ஆவணம் செய்ய இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

எனவே தமிழகம் முழுவதும் மூடப்பட்ட பல்வேறு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். வாழ்வாதாரமின்றி தவிக்கும் தொழிலாளர்கள் நலனை மீட்டெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலையை இழந்த பல தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் ஆலை பகுதி கிராம மக்கள், தூத்துக்குடி கடலோர பகுதி வாழ் மீனவ மக்கள், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள், தமிழ்நாடு சந்தை சாலையோர சிறுவியாபாரத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம், பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் தாலுக்கா வாரி உரிமையாளர்கள் சங்கம், ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் சங்கம், அகில இந்திய நாடார்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் கலந்துகொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்