Published on 20/06/2024 | Edited on 20/06/2024

கரூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும், இந்தி திணிப்பை தடுக்க வேண்டும், குற்றவியல் சட்ட மாற்றங்களைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.