ரயில்களில் மாற்றுத்திறனாளிக்கானப் பெட்டியை இணைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Demonstration demanding to connect the box for the disabled on the trains!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ரயில்களில் முன்னும் பின்னும் மாற்றுத்திறனாளிகளுக்காக இணைக்கப்பட்ட இரண்டு பெட்டிகளை மீண்டும் இணைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீத கட்டண சலுகை அமலாக்க வேண்டும். ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்வது, கழிவறையில் சாய்வு தளம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (12/08/2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர் ஆளவந்தார், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டு போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Chidambaram Cuddalore district trains
இதையும் படியுங்கள்
Subscribe