pmk

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஏ.சித்தூரில் உள்ளது திருஆரூரான் சர்க்கரை ஆலை. இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3000-த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு அனுப்பி வருகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2018 வரையில் விவசாயிகள் அனுப்பிய கரும்புக்காக 68 கோடி ரூபாய் நிலுவைபாக்கி உள்ளது.

Advertisment

அதேபோல் கரும்புக்கான காப்பீட்டு தொகையும் தராமல், ஆலை நிர்வாகம் காலந்தாழ்த்தி வருகின்றது.

Advertisment

pmk

இந்நிலையில் நிலுவைத் தொகை மற்றும் காப்பீட்டுதொகையும் உடனடியாக வழங்கக் கோரி பா.ம.கவின் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பாக பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாநில செயலாளர் வேலுசாமி, பா.ம.க மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஆலை நிர்வாகத்தின் செயலை கண்டித்து கண்டன உரையாற்றினர். மேலும் ஒரு வாரத்திற்குள் ஆலை நிர்வாகம் நிலுவைதொகை வழங்காவிட்டால் மாபெரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக நிர்வாகிகள் ஆலை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisment