Demonstration condemning the Union Commissioner!

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு 64 ஊராட்சிகள் உள்ளன. இந்த 64 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் 64 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கான ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில், மாலை ஊராட்சி செயலாளர்கள் ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த நிலையில், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஜனவரி மாதம் சம்பளம் வழங்கும் போது முதல்வர் அறிவித்த அகவிலைப்படி 31 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என நல்லூர் ஒன்றிய ஆணையர் சங்கரிடம் ஊராட்சி செயலாளர்கள்கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி எல்லாம் தர முடியாது என்று மறுத்துவிட்டு ஒன்றிய ஆணையர் சங்கர் கோபத்துடன் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊராட்சி செயலாளர்கள் 63 பேர் நேற்று மாலை 4 மணி அளவில் ஒன்றிய ஆணையர் சங்கரை கண்டித்து ஒன்றிய அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது, அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அரசுப் பணியாளர்களுக்கு ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி 31 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார். அதன்படி 31 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கும் வரை ஆலோசனை கூட்டம் உட்பட ஒன்றிய பணிகளில் ஈடுபட மாட்டோம். எங்களது கிராம பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவோம் என தெரிவித்துள்ளனர். ஒன்றிய ஆணையரை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.