Vajubhai Vala

Advertisment

ஒரு தலைபட்சமாக செயல்படும் கர்நாடகா கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பலம் இருந்தும், பெரும்பான்மை இல்லாத பாஜவை ஆட்சி அமைக்க அழைத்த கவர்னரை கண்டித்தும், பாரபட்சமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சயினர், ஒரு தலை பட்சமாக செயல்பட்ட கர்நாடக கவர்னரை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் புறநகர் மாவட்ட தலைவர் மகேஷ் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்என்.கந்தசாமி, சவுந்திரகுமார் உட்பட மகளிர் அணியினர், கலை இலக்கிய அணி என பலர் கலந்து கொண்டனர்.