Advertisment

திருச்சியில் சிஏஏ குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பு ஆர்ப்பாட்டம்!

Demonstration by Islamic organization in Trichy demanding withdrawal of CAA citizenship law

இந்தியாவில் கடந்த ஆண்டு சிஏஏ, என்ஐஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் ஷாஹின்பாத் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர் கரோனா தொற்று நோய் பாதிப்பின் காரணமாக அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு இந்த சட்டத்தை மீண்டும் பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது.

Advertisment

மேலும் இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் மாநில பொருளாளர் சபியுல்லாகான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

Central Government protest thiruchy caa act
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe