Demonstration by hill people to issue badges and certificates

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு பழங்குடி மக்கள் வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், சாதி சான்றிதழ்கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் ராணிப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை நடந்து கோசமிட்டபடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கண்டன கோஷத்தில் பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன்பு நின்றபடி மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பரிசளித்து உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தக் கண்டன கோஷத்தில் தெரிவித்தனர்.

இந்தக் கண்டன கோஷத்தில் மாவட்டத்தலைவர் சேகர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் பங்கேற்றனர்.