Advertisment

"தமிழக வேலை தமிழர்களுக்கே" த.வா.க சார்பில் ஆர்ப்பாட்டம்!

tvk

தமிழ் நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில், இங்குள்ள அரசு பணிகளில் வடமாநிலத்தவர்களை பணியில் அமர்த்த முயல்வதை ஏற்க முடியாது,தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும், வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் பணி வழங்குவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'தமிழக வேலை, தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இணையவழி ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடைபெற்றன.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இணைய வழியாக அவரவர் வீடுகளில், அவரவர் பகுதிகளில் இருந்தபடி நெய்வேலியில் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன், தமிழர் படை தளபதி வே.க.முருகன், திருநாவுக்கரசு, விருத்தாசலம் நகர செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு "தமிழக வேலை, தமிழக இளைஞர்களுக்கே...' என்ற முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

employment job corona virus tvk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe