டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! 

Demonstration on behalf of Tasmac Employees Union!

டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டு குழு சார்பில் இன்று தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், திருச்சி டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் வெளிப்படையாக ஏபிசி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக நடத்தும் பார்களை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

TASMAC trichy
இதையும் படியுங்கள்
Subscribe