Advertisment

ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Advertisment

ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் பணப்பயன்களை வழங்க வேண்டும், வேலைக்கு வந்தும் பணி மறுக்கப்படும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழன் அன்று (செப்.29) பல்லவன் இல்லம் முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ஆர். துரை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், சம்மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார், சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. தயானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe