Advertisment

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

Demonstration on behalf of Indian Students Union demanding cancellation of NEET exam

சிதம்பரம் அண்ணாமலை நகர், ராஜேந்திரன் சிலையருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

மாவட்ட துணை செயலாளர் ஆகாஷ் இதற்குதலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரவேல், செயற்குழு உறுப்பினர் திலிப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என்றும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisment

students NEET Protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe