/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/xcvxcxvc.jpg)
சிதம்பரம் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் நகர செயலாளர் கோபால் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜராஜன் புவனகிரி ஒன்றிய செயலாளர் சதீஷ், சிதம்பரம் நகர் குழு உறுப்பினர் மேத்யூ, மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் லெனின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் பரங்கிப்பேட்டையில், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஆழ்வார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)