Advertisment

வணிகர் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்! 

Demonstration on behalf of the Chamber of Commerce!

திருச்சிபாலகரைரவுண்டானாஅருகே நேற்று மாலை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில்ஜிஎஸ்டிவரியைஎதிர்த்துக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்டைமன்ராஜா வெள்ளையன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். மேலும்ஆர்ப்பாட்டத்திற்குத்திருச்சி மாவட்ட தலைவர் ரவி முத்து ராஜா தலைமை தாங்கினார்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக, வணிகர்களிடம் 200% அபராத தொகையை வசூல் செய்வதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். எடை பாலம் அருகில்லோடுவண்டிகளிடம்டெலிவரிசலான்இன்வாய்ஸ்பில்கேட்டுவணிகர்களைத்துன்புறுத்தக்கூடாது. பொருட்களின் விலை இன்று 3 மடங்கு உயர்ந்துள்ளதால் இ-வே-பில்விலக்கு ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்த வேண்டும். வணிகர்கள்ஆண்டுக்குச்சேவை வரி 20 லட்சத்திலும், விற்பனை செய்யும் சரக்குக்கு 40 லட்சம் வரை வரி விலக்கு இருக்கும் போது வணிகர்களுக்குஜிஎஸ்டிபதிவு அவசியம் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் வணிகர்கள் கொண்டு செல்லும் சரக்கு அபராதம் விதிக்கக்கூடாது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பினால் சிறு குறு பெரு வணிகர்கள் தொழில் நடத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்;அதைத்தடுத்து நிறுத்தி தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் ஒருசிறப்புத்தீர்மானம் நிறைவேற்றிவணிகர்களைப்பாதுகாத்திட வேண்டும். சரக்கு விற்பனை செய்யும் வியாபாரி அரசுக்கு வரி கட்டவில்லை என்றால்ஜிஎஸ்டிஅதிகாரி அவர்களிடம் மட்டும்தான் வரியை வசூலிக்க வேண்டும். அதைத் தவிர்த்து எக்காரணத்தைக் கொண்டும் கொள்முதல் செய்யும் வணிகர்களிடம் அரசு வரி வசூல் செய்யக்கூடாது.

Advertisment

அரசு சரியான முறையில் வணிகர்களை அழைத்து ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால்அதன்படிசெய்யாமல் பாதகமாக நடந்து கொள்கிறார்கள்.‌ வணிக வரித்துறை அதிகாரிகள் மேலும் வியாபாரிகளுக்கு இடையூறு கொடுத்தால் அடுத்த கட்டநடவடிக்கையாகச்சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகம் முன்பு அனைத்து வணிகர்களும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe