Advertisment

மம்தா பானர்ஜியை கண்டித்து சென்னையில் ஏ.பி.வி.பி. ஆர்ப்பாட்டம்

Demonstration against Mamata Banerjee

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியை கண்டித்து சென்னையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் 24.09.2018 அன்று மேற்கு வங்கத்தில் தங்களுக்கு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததாலும், மேலும் இதனை அறிந்தே அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடும் வகையில் அறிவியல், கணக்கு, தாய்மொழி பாடத்திற்கு ஆசிரியரை நியமிக்காமல் உருதுமொழி பாடத்திற்கு மட்டுமே ஆசிரியரை நியமித்துள்ளனர்.

Advertisment

இதனை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு மாணவர் இறந்துள்ளார். மற்றொருவர் அபாய நிலையில் உள்ளார்.இத்தகைய அராஜக போக்கை கடைப்பிடிக்கும் மம்தா பானர்ஜியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.

Mamata Banerjee against demonstration
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe