Demonstration against Chidambaram Nataraja temple deities

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக சைவ வைணவ பாகுபாட்டால் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது கோவிந்தராஜ பெருமாள் கோவில் இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது இதற்கு இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த போது நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே தெய்வீகபக்தர்கள் பேரவை சார்பில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் தீட்சிதர்களை கண்டித்தும் பிரம்மோற்சவம் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தி அரை நிர்வாண கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார்.

Advertisment

இதில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் மக்கின், மாவட்ட நிர்வாகி ராஜா சம்பத்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி வி எம் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி, தெய்வீக பக்தர்கள் பேரவை நிர்வாகிகள், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நடராஜர் கோவில் தீட்சிதர்களைக் கண்டித்தும், பிரம்மோற்சவம் நடத்த அனைத்து ஏற்பாடுகளுக்கும் எந்தவித தடையும் விதிக்காமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினார்கள்.