Advertisment

பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வலியுறுத்தி 152 பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம்!

Demonstration with 152 feet Pongal demanding 152 feet of water stagnation in Periyar Dam!

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வலியுறுத்தி கூடலூரில் விவசாய சங்கத்தினர் 152 பொங்கல் வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

தேனி மாவட்டம் கூடலூரில் மலைச்சாரல் விவசாயச் சங்கம், முல்லைப் பெரியாறு பாசன குடிநீர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை விரைவில் பலப்படுத்தி அணையில் 152 அடிநீர் தேக்க வேண்டும், அதுபோல் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தேனி மாவட்டத்தினுடன் இணைக்க வேண்டும் உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்து கூடலூர் புது பேருந்து நிலையம் அருகே 152 பொங்கலைப் பெண்கள் வைத்தனர்.

Advertisment

இதில் வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், முல்லைப் பெரியாறு பாசன நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சதீஷ் பாபு, விவசாயச் சங்க தலைவர் கொடி அரசன், பொருளாளர் ஜெயபால், துணைத் தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Farmers mullai periyaru dam pongal struggle Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe