கடலூர் மாவட்டம் பண்ருட்டி- வடலூர் நெடுஞ்சாலையில், நெய்வேலி நகரப்பகுதிக்கு செல்லும் நுழைவாயிலில் என்.எல்.சி நிறுவனம் சார்பில் இரண்டு வளைவுகள் (ஆர்ச்) அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ச் என்.எல்.சி-யின் அடையாளமாக பல ஆண்டு காலமாக திகழ்ந்து வருகிறது. மேலும் அந்த பகுதியும் 'ஆர்ச் கேட்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில்இந்த இரண்டு ஆர்ச்சுகளில் ஒன்று இன்று (25/09/2019) இடிக்கப்பட்டது. மற்றொன்றும் ஓரிரு நாட்களில் இடிக்கப்பட உள்ளது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழி சாலை திட்டத்திற்கு இடையூறாக ஆர்ச்கள் இருப்பதால் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக அடையாளமாக திகழ்ந்த என்.எல்.சி நுழைவாயில் இடிக்கப்பட்ட சூழல், அப்பகுதி மக்களின் மனதில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.