Advertisment

வீடுகளை இடிக்க எதிர்ப்பு- தீக்குளித்தவர் உயிரிழப்பு! 

demolition of houses oldman incident police investigation

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ குளித்த முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Advertisment

அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தின் ஒருவர் தொடுத்த வழக்கில் மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய பகுதிகளில் உள்ள 259 வீடுகளையும் 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அதன்படி வீடுகளை இடிக்கும் பணி கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 150- க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் மீண்டும் வந்த போது, கண்ணையா என்ற முதியவர் எதிர்ப்பு தெரிவித்துதீக்குளித்தார்.

Advertisment

இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த முதியவர் கண்ணையா உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident oldman Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe