/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2829.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் - கடலூர் நெடுஞ்சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்டமுல்லாஏரி பகுதி மற்றும்கோட்டாச்சியர்அலுவலகம் அருகில் உள்ள 1.25 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு தாங்கல் பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆக்கிரமிப்பு செய்து 150-க்கும்மேற்பட்ட வீடுகள், கடைகள்எனக்கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஏரியையும் ஏரி பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக விருத்தாசலத்தைச் சேர்ந்த தடயம்பாபுஎன்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்பொதுநலவழக்கு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த 2018, ஜனவரி 10-ஆம் தேதிமுல்லாஏரிப்பகுதிஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றாதது குறித்து 2021 நவம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குதொடரப்பட்டது. அதன்பேரில், வரும் ஆகஸ்டு 19-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன்அறிக்கையைதாக்கல் செய்யுமாறு சென்னை நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டடங்கள், வணிக நிறுவன கட்டடங்களை வட்டாட்சியர் தணபதிதலைமையில் நூற்றுக்கு மேற்பட்டபோலீசார்பாதுகாப்புடன் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு, இடிக்கும் பணியினை இன்று தொடங்கினர்.
முதற்கட்டமாக இந்திராநகர்பகுதியில் உள்ளபக்ருதீன்மற்றும் ராமசாமி என்பவர்களின் வீடுகளை இடித்தனர். பின்னர் அப்பகுதியில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்தாசில்தார்தணபதிமற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் தங்களது வாழ்வாதாரம் மற்றும் பள்ளி குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும், ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.குடியிருப்புவாசிகளின்கோரிக்கை குறித்து உயர்அதிகாரிகளுக்குதெரிவிப்பதாககூறி, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஜே.சி.பிஇயந்திரத்தைதிருப்பி எடுத்துச் சென்றனர்.
காவல்துறை மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் என சுமார் 300-க்கும்மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)