Advertisment

நூற்றாண்டு கண்ட சித்தநாதன் பஞ்சாமிர்த கடை இடிப்பு

Demolition of century-old Siddhanathan Panchamirtha shop

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

பழனி அடிவாரத்தில் உள்ள அண்ணா செட்டிமடம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அடிவாரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. 120 குடியிருப்புகள் மற்றும் கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. படிப்பாதை அருகே நூறாண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பிரசித்திபெற்ற சித்தநாதன் பஞ்சாமிர்தம் கடையும் இடித்து அகற்றப்பட்டது.

Advertisment
highcourt pazhani police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe