high court

Advertisment

மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ஹரிராகவன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளிலிருந்து உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஹரிராகவன் கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சத்தியபாமா உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர்அகமது அமர்வில்விசாரணைக்கு வந்த போது " மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிட்டார், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளில் மனுதாரரின் கணவருக்கு ஜூலை 24-ல் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணையில் இதையடுத்து போலீஸாரின் நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் மனுதாரரின் கணவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது எப்படி? என கேள்வி எழுப்பினர்.

Advertisment

பின்னர் நீதிபதிகள்உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையில் வேன்டுமேன்றே அவர் மீது தேசிய பாதுகாப்பு வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது . இங்கு நடப்பது ஜனநாயக நாடா? இல்லை போலிஸ் நாடா? என்றுநீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.பின்னர், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று காலை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள் எதன் அடிப்படையில் இவர் மீது தேசிய பாதுகாப்பு வழக்கு பதிய பட்டது என கேள்வி எழுப்பினார். கடந்த ஜூலை 20 தேதி அன்று மாவட்ட கண்காணிப்பாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்திருந்தார் அதன்படி வழக்கு பதிவு செய்யபட்டது என்றார்.இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஜூலை 26 மாலை 6:10 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றார் .

இதனை பதிவு செய்த நீதிபதிகள் சி.டி. செல்வம் பசீர் அகமது மாவட்ட ஆட்சியருக்கு சில அறிவுரைகள் வழங்கினர்.

அதில் மாவட்ட ஆட்சியர்யின் ஒரு கையெழுத்து தனி நமபரின் சுதந்திரத்தை பாதிக்கும் படி இருக்க கூடாது. ஆகையால்மாவட்ட ஆட்சியர் ஓவ்வொரு கையெழுத்து போடுவதற்கு முன்பு அதன் முழு விவரத்தை ஆராய்ந்து உறுதி செய்தபின் கையெழுத்து இட வேண்டும் என்றனர்.

மேலும் காவல்துறை கெடுக்கும் ஆவணங்களில் நீதிமன்றம் என்ன கூறி உள்ளது என்பதை கடைசி நிமிடம் வரை ஆய்வு செய்தபின் தான் கையெழுத்து இட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்இனி நீங்கள் இது போன்று செயல் பட மாட்டீர்கள்என்று நீதிமன்றம் நம்புகிறது.

Advertisment

வழக்கறிஞர் ஹரி ராகவன் மீது போட பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யபடுகிறது என உத்தரவிட்டனர்.