Advertisment

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு; சப்-ரிஜிஸ்டரை பணிநீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

demanding dismissal of sub-registrar who registers deed with forged documents

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி சார் பதிவாளர் அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டராக மணிராஜ் பணியாற்றி வருகிறார். இவர் முறையான ஆவணங்களைக் கொண்டு பத்திர பதிவு செய்யாமல் ஆவண எழுத்தர்களான சேகர் மற்றும் சேட்டு ஆகியோர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்வதாக கூறி பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

போலி ஆவணம் கொண்டு பத்திரப்பதிவு செய்ததால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சப் ரிஜிஸ்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு பணி நீக்கம் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisment
kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe