Skip to main content

திருநங்கை பாலியல் குற்றங்களை தடுக்க தெளிவான சட்ட வரையறை வேண்டும் என கோரிக்கை 

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

Demand for clear legal framework to prevent transgender crimes

 

மாற்று பாலினத்தோர் பாதுகாப்பு உரிமைச்சட்டம்  2019 என்ன சொல்கிறது என்றால் ஒரு திருநங்கைக்கு பாலியல் வன்கொடுமை அடையும்போது குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு அதிகபட்சம் தண்டையாக  6 மாதகால சிறை தண்டனையாகவே உள்ளது. 

 

ஆனால்  அதேவேளையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது குற்றம்சாட்டபட்ட நபருக்கு  குறைந்த பட்சமாக 6 வருடம் முதல் 7 வருடம் வரை சிறை தண்டணை இருக்கிறது. 

 


திருநங்கைகளுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவும் செய்கிறது. இதற்கான ஐபிசியும், திருநர் பாதுகாப்பு உயர்ந்த பட்ச தண்டனையும் இல்லை, என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

 

உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்த நிலையில் திருநங்கைகளுக்கு  மூன்றாம் பாலினத்தவர்கள் என நீதிமன்றம் அங்கீகரித்தாலும் ஆண்களுக்கு பெண்களுக்கும் சமமாக திருநங்கைகளுக்கு  இழைக்கப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க இந்திய தண்டனை சட்டத்தில் எந்தவொரு விதிமுறையும் பிரிவும் இல்லை. 

 


பணியிடங்களில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாரணை கமிட்டியிலும் மூன்றாம் பாலினத்தவர்களை பாதுகாக்க எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சரியான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். திருநங்கைகளுக்கான பாலியல் துன்புறுத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். 

 

இது தொடர்பாக பேசிய திருநங்கை கிரேஸ்பானு, பெண்களுக்கு சமமான சட்டம் இல்லாத காரணத்தால் எங்களின் மீதான வன்கொடுமைகளை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஐபிசி சட்டமும், திருநர் சட்டமும் எங்களுக்கு  தெளிவான சட்ட வரையறை வகுக்கவில்லை, அதற்கான சட்டவரையை வகுக்கவேண்டும்,  குழந்தைகள் திருநங்கை  பாலியல் தன்மை அற்ற பள்ளி பருவங்களில் பலத்தாகரம் அதிகரித்துவரும் நிலையில் அதற்கான தேசிய சட்டம் வகுக்கவேண்டும் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்