corona

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது1,542லிருந்து குறைந்து 1,551 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று அதிகமாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,63,230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 182 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 162 என்று இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

Advertisment

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,856 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,559 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,768 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,57,884 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கோவை-230, ஈரோடு-115, திருவள்ளூர்-72, தஞ்சை-77, நாமக்கல்-45, சேலம்-62, திருச்சி-55, திருப்பூர்-64, கடலூர்-39 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கோவையில் 230 பேருக்கு கரோனாஉறுதியாகியிருந்த நிலையில் இன்று 230 பேருக்கு கரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளது.

corona

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் டெல்டா வகை கரோனாவால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''தமிழகத்தில் டெல்டா வகை கரோனாவால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுப்பிய மாதிரிகளில் 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு டெல்டா வகை கரோனா உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.