Advertisment

டெல்டா மையப்பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.... அதிகாரிகளே காரணம்; குமுறும் விவசாயிகள்!

மேட்டூர் அணை திறக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்களைத்தாண்டி விட்டது ஆனாலும் பாசனத்திற்கான தண்ணீர் டெல்டா மாவட்டத்தின் மையப்பகுதிக்கு வந்து சேரவில்லை என விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் விவசாயிகள்.

Advertisment

மேட்டூர் அணை ஆகஸ்ட் 13ஆம் தேதி திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக ஆகஸ்ட் 17ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. கடந்த காலங்களில் கல்லணை திறக்கப்பட்டு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றுவிடும். ஆனால் கல்லணை திறக்கப்பட்டு மூன்று வாரங்களை கடந்துவிட்டன ஆனாலும் மையப் பகுதிகளுக்கு கூட தண்ணீர் செல்லவில்லை. "மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் தான் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும் ஆனால் மேட்டூர் அணையிலிருந்து 15 நாட்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமே திறக்கப்படுவதே முதல் காரணம்," என்கிறார்கள் விவசாயிகள்.

 The delta is not getting water to the epicenter .... the authorities are the cause; farmers!

கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, ஆகிய பிரதான ஆறுகளில் மொத்தமே 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதற்குமேல் திறந்தால் இன்றைக்கு ஆறுகள் வாய்க்கால்கள், நீர்தேக்கிகள் இருக்கும் நிலமையில் உடைப்பு ஏற்பட்டு பெரும் சேதத்தை உண்டாக்கும், அதோடுஆறுகளில் தூர்வாரும் பணிகளும், குடிமராமத்து பணிகளும் நடைபெறுகிறது. இதனால்தான் பிரதான இந்த மூன்று ஆறுகளிலும் தண்ணீர் குறைவாக விடப்படுகிறது." என்கிறார்கள் சில பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

Advertisment

குறைந்த அளவு தண்ணீர் காவிரியில் இருந்து வடவாற்றிலும், வெண்ணாறு, வெட்டாறு குடமுருட்டியிலும் பிரித்து விடப்படுகிறது. இதன் காரணமாக கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல இடைப்பட்ட பகுதிகளுக்கும் தண்ணீர் முழுமையாக சென்றடையாத நிலையே தொடர்கிறது.

 The delta is not getting water to the epicenter .... the authorities are the cause; farmers!

கல்லணையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவையாறு அருகே உள்ள கபிஸ்தலத்தில் இருந்து பிரிந்துவரும் மண்ணியாற்றில் ஒரு சொட்டுத்தண்ணீர்கூட இன்னும் திறக்கவில்லை. அங்குள்ள காவிரியிலேயே ஓரமாகத் தான் தண்ணீர் செல்கிறது. காவிரியின் மையப்பகுதியான திருப்பணந்தாள், மணல்மேடு, சோழபுரம், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி நீர் இன்னும் எட்டவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், " ஆறுகள், குளங்களை தூர்வாருகிறோம் என்கிற பெயரில் மணலை கொள்ளை அடித்துவருகின்றனர். அதோடு விளைநிலங்களில் எடுக்கப்படும் மணல் ஆறுகளை அடைத்து கடத்திவருவதால் ஆற்றில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளே கையூட்டு வாங்கிக்கொண்டு அஞ்சுகின்றனர்." என்கிறார்கள் விவசாயிகள்.

water Kaveri delta districts
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe