Skip to main content

டெல்லி போராட்டத்தில் டெல்டா விவசாயிகள்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

Delta farmers in Delhi struggle!

 

'இந்திய விவசாயிகளை கார்ப்பரேட்களுக்கு அடகு வைக்கும் கறுப்புச் சட்டங்களை ரத்து செய்!' என்ற முழக்கங்களோடு தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகிறது. ஆனால், இந்தச் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று சமாதானம் பேசி போராடும் விவசாயிகளை வீட்டுக்கு அனுப்பும் மத்திய அரசின்முயற்சி பலனளிக்கவில்லை.

 

இதுவரை தங்களின் சொந்த ஊர்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போது டெல்லி நோக்கிப் புறப்பட்டுவிட்டனர். இன்னும் சில நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லியில் கொடிப்பிடிக்கப் போகிறார்கள். டெல்லிக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டால் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல அந்தந்த ஊர்களில் போராட்டங்களை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

 

Delta farmers in Delhi struggle!

 

இந்நிலையில்தான், தமிழகத்தில் இருந்து டெல்டா இளம் விவசாயிகள் டெல்லிக்குச் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) கடந்த இரண்டு வருடங்களாக, டெல்டா மாவட்டங்களில் பல வருடங்களாக மராமத்துச் செய்யப்படாத நீர்நிலைகளைத் தூர்வாரி, தண்ணீரை சேமித்து வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த நிமல்ராகவன், நவீன் ஆகிய இளம் விவசாயிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இணைந்து போராடச் சென்று தமிழில் எழுதிய பதாகைகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.

 

Delta farmers in Delhi struggle!

 

இதுகுறித்து நிமல்ராகவன் கூறும்போது, விவசாயம் காக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கைஃபா உழைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது நமக்காக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதனால், நாங்களும் வந்தோம். போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் எங்களைப் பார்த்ததும் உற்சாகமாக வரவேற்றார்கள். முதல் நாளில் இருந்த அதே உற்சாகத்தோடு இப்பொழுதும் போராட்டம் தொடர்கிறது. பணக்கார விவசாயிகள் மட்டுமல்ல, சாதாரண விவசாயிகளும் விவசாயப் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகள் எனப் பாகுபாடின்றி கலந்துகொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் விவசாயிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், மட்டுமே வீட்டுக்குப் போவார்கள் இல்லை என்றால் எத்தனை மாதங்கள் ஆனாலும் போராட்டக் களத்திலேயே நிற்பார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்தப் போராட்டத்தில், டெல்டா விவசாயிகளாக நாங்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

 

போராட்டங்களை முடக்க நினைக்காமல் விவசாயிகளைக் காப்பாற்ற அரசுகள் முடிவெடுக்க வேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.