தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, சமலாபுரம், மாங்குடி, நன்னிலம், ஆண்டிபந்தல், பேரளம், குடவாசல் ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நாகை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி, கொள்ளிடத்திலும் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/heavy rain555.jpg)
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us