Advertisment

பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; டெலிவரி பாய் கைது

Delivery boy arrested for assaulting woman

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் டெலிவரி செய்ய வந்த நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

'செப்டோ' எனும் நிறுவனம் மூலம் மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வரும் கோபிநாத் என்பவர் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் பெண் ஒருவர் மட்டும் தனியாக இருந்ததை அறிந்து கொண்ட கோபிநாத் செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என அவரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

Advertisment

அப்பெண்ணும் அனுமதித்த நிலையில் வீட்டிற்குள் சென்ற கோபிநாத் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அப்பெண் செப்டோ நிறுவனத்தில் புகார் அளித்தும், அடுத்த வாரம் மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்த பொழுது அதே கோபிநாத் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கோபிநாத்தை பிடித்து மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். கோபிநாத்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai delivery police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe