Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத,போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளைஅனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும்18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்குசாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

Advertisment

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ளபெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி,ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில்போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத்தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

Advertisment

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும்வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.