Advertisment

டெல்லி பாராளுமன்ற சாலையில் தொடர் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

parliamentdelhi

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி மார்ச் 26 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி 24.03.2018காலை7-00 மணி மன்னார்குடி பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரயில் நிலையம் சென்றடைதல்.8.30 மணி மன்னையிலிருந்து பாசஞ்சர் ரயில் மூலம் 10.15க்கு மயிலாடுதுறை சென்றடைதல்.

Advertisment

11.30 க்கு மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு (சோழன்)திருச்சிஎக்ஸ்பிரஸ் மூலம் சென்னை பயணம்.12.00 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வரவேற்ப்பு. மாலை 6.00 மணி சென்னை எழும்பூர் சென்றடைவது.உடன் எழும்பூரிலிருந்து ஊர்வலமாக சென்னை சென்ரல் ரயில் நிலையம் சென்று இரவு 10.o0 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி புறப்படுதல்.25 ரயில் பயணம்.26ந் தேதி காலை 7.00 மணி டெல்லி ரயில் நிலையம் சென்றடைதல். அன்று காலை 10.00 மணிக்கு டெல்லி பாராளுமன்ற சாலையில் திட்டமிட்டப்படி உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும் என தெரிவித்துள்ளார்.

parliamentdelhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe