மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் முதல்முறையாக கூடி, ஆலோசனைக்கூட்டம் நடத்துகின்றன. இக்கூட்டத்தில் ஐமு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.