டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்கங்களின் சார்பாக இன்று கண்டன கூட்டம் நடைபெற்றது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பிரதான வாயிலில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பாக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். மேலும், டெல்லி தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த நீதித்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.