டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

delhi jnu students issues pudukkottai college students

Advertisment

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்த மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த மாணவர்கள் போராட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.