முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடன் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை 11.45 மணியளவில் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் உடனிருப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.