ADVERTISEMENT

"கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது"- மு.க.ஸ்டாலின் பேச்சு...

09:18 AM Dec 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் 'விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறு' என்ற வாசகத்துடன் கூடிய பச்சை நிற 'மாஸ்க்' அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக உண்ணாவிரதத்தில் தலைவர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை; முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். போராடும் விவசாயிகளை அன்னிய கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய அரசு முத்திரை குத்துகிறது" என்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் முத்தரசன், பாலகிருஷ்ணன், கனிமொழி, பாரிவேந்தர் ரவிபச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன், ஜவாஹிருல்லா, தங்கபாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்களும், தி.மு.க. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

கரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவல்துறையினரின் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT