Advertisment

ப.சிதம்பரத்திடம் விசாரணை;ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்?

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று இரவு கைது சிபிஐ கைது செய்தது. ப.சிதம்பரம் வீட்டில் இருப்பது தெரிந்து, சுவர் ஏறிக்குதித்தும், வீட்டின் பின் பக்க கதவை உடைத்தும் உள்ளே சென்று கைது செய்தனர்.

Advertisment

ச்

ப.சிதம்பரத்திடம் இன்று காலை முதலே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இன்று பிற்பகல் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும். அதேசமயம், ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்படலாம்.

சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

P chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe