Advertisment

பெட்ரோல் போட தாமதம்... கொலையில் முடிந்த வாக்குவாதம்... பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி!

Delay in refueling ...  Shocking release of CCTV footage!

நெல்லை மாவட்டம் பனங்குடியில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நெல்லை மாவட்டம் பனங்குடி வடக்குப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மணீஷ்ராஜா என்ற நபர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். அப்பொழுது பெட்ரோல் நிரப்ப தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் மணீஷ்ராஜாபங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. எதேச்சையாக அங்கு வந்த கலைச்செல்வன் என்ற வாடிக்கையாளர் சண்டையை விலக்க சென்ற நிலையில் மணீஷ்ராஜா அவரது தந்தை பாலசுப்ரமணியன் ஆகியோர் கலைச்செல்வனை தாக்கினர். இதில் கலைச்செல்வன் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். இவர்கள் மோதிக்கொண்ட அத்தனை காட்சிகளும் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தப்பியோடியவர்களை பனங்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

incident nellai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe