Advertisment

ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரைசா!

DEFOMATION NOTICE ISSUED ACTRESS RAISA WITH DOCTOR

பிக்பாஸ் புகழ்நடிகையும், பிரபல மாடலுமான ரைசா, அடிக்கடி தனது முகத்திற்குஃபேசியல் சிகிச்சை செய்து, முகத்தைப் பொலிவுடன் வைத்திருப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் மருத்துவர் பைரவி அளித்தஃபேசியல் சிகிச்சையால் நடிகை ரைசாவின் முகம் வீங்கியது. இதுகுறித்த புகைப்படத்தையும் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில், மருத்துவர் பைரவியிடம் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரைசாவின் வழக்கறிஞர் மருத்துவருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் "முகப்பொலிவு சிகிச்சையைத் தவறாக செய்துள்ளார். ரூபாய் 1.27 லட்சம் செலுத்திசிகிச்சை எடுத்தும் முகம் பொலிவு பெறாமல் ரத்தக்கசிவு, வீக்கம்தான் ஏற்பட்டது. தவறான சிகிச்சை காரணமாக முகம் வீங்கியதால் ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். 15 நாளில் இழப்பீடு தராவிடில் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவர் பைரவி, “இந்த சிகிச்சையை இதற்கு முன் பலமுறை ரைசா எடுத்துள்ளார். அப்போதெல்லாம் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. தோல் சிகிச்சையின் அத்தனை தரவுகளையும் நன்கறிந்த ரைசா, எங்கள் கிளினிக் குறித்து அவதூறு பரப்புவதற்காகவே அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் எனது மற்றும் எங்கள் நிறுவனத்தின்நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் நான் அனுபவித்த அவதூறு, மன வேதனை ஆகியவற்றுக்கு மன்னிப்பும் இழப்பீடும் கோருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Notice Doctor raisa willson Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe