​    ​child

Advertisment

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, தற்போது 8 பேர் வெளியேறிய நிலையில் இன்று சனிக்கிழமை படப்பிடிப்பு நடந்தது.

இதில் கலந்துகொள்ள கமல் மற்றும் பொதுமக்கள் வருகை தர இருந்தனர். இந்த சமயத்தில் நேற்று இரவு அரியலூர் மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கை கழுவும்போது மாடியில் இருந்து விழுந்து பலியானதாக சொல்லப்படுகிறது.

ஆனால், இதில் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளது. கை கழுவும் இடம் அவ்வளவு பாதுகாப்பு இடமா? மேலும் இந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடுகள் உள்ளதா? அல்லது ஊழியர்களுக்குள் இடையே நடந்த மோதலில் குணசேகரன் கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் சென்னை நசரதபேட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

கடந்தமுறை நடந்த இதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு தொழிலாளி பலியானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கமல் தொகுத்து வழங்கும் இந்த வார படப்பிடிப்பு காலதாமதமாக நடந்து வருகிறது.